நோய்வாய்ப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் உள்ள ‘பாத்திய’ யானைக்கு இன்றும் (08) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
யானையின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் காணப்படுவதாக கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிய யானையின் உடல்நிலை குறித்து கருத்து தெரிவித்த கால்நடை வைத்தியர் தரிந்து விஜேகோன் கூறியதாவது:
“இன்று சிகிச்சை வழங்கப்படும் மூன்றாவது நாளாகும். இன்று சிகிச்சை அளிக்கும்போது யானை ஓரளவு முன்னேற்றம் காட்டுவதாக நம்புகிறோம். இதற்கு காரணம், யானை தும்பிக்கையால் தண்ணீர் எடுத்து உடலில் தெளித்துக் கொள்கிறது. தலையை இருபுறமும் அசைக்கிறது. கைகளிலும் கால்களிலும் இயக்கங்கள் ஓரளவு மேம்பட்டுள்ளன. இருப்பினும், யானையின் நிலைமை குறித்து இன்னும் உறுதியற்ற நிலையிலேயே உள்ளோம். ஆனால், நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்று காலை யானையின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றத்தை கவனிக்க முடிந்தது. மேலும், யானை இப்போது வழக்கமான இயல்பான முறையில் உணவு உண்ணத் தொடங்கியுள்ளது. கிராம மக்கள் உணவு கொண்டு வந்து, மிகுந்த அன்புடன் இந்த யானையை கவனித்து வருகின்றனர்.”