கணவரை கொலை செய்ய ஆட்களை ஏற்பாடு செய்த கனேடிய பெண் கைது

சுவிட்சர்லாந்தில் தன் முன்னாள் கணவரை கொலை செய்ய ஆட்களை ஏற்பாடு செய்த கனேடிய பெண்ணொருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு தனது முன்னாள் கணவரை கொலை செய்ய மூன்று பேருக்கு பணம் கொடுத்துள்ளார் 49 வயதுடைய கனேடிய பெண்ணொருவர்.

கணவரை கொலை செய்ய ஆட்களை ஏற்பாடு செய்த கனேடிய பெண் கைது | Canada Women Try To Kill Husband Arrest In Germany

அவர்கள் சுவிட்சர்லாந்தில் வைத்து, அந்த நபர் மீது பட்டாக்கத்தியால் தாக்குதல் நிகழ்த்தியும், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பிவிட்டார். என்றாலும், அவர் படுகாயமடைந்தார்.

இத்தனை ஆண்டுகளாக சுவிஸ் பொலிசார் அந்தப் பெண்ணைத் தேடிவந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று அவர் கனடாவின் ரொரன்றோவிலிருந்து ஜேர்மனியின் பிராங்பர்ட்டுக்கு விமானத்தில் சென்றுள்ளார்.

பிராங்பர்ட் விமான நிலையத்தில் ஜேர்மன் பொலிசார் அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளார்கள்.

அவரை சுவிட்சர்லாந்துக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் துவக்கியுள்ளார்கள்.

குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

Exit mobile version