புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு தபால் புகையிரதத்தில் கிளிநொச்சி தொண்டமாநகர் நகர் பகுதியில் நேற்று (11) புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொண்டமாநகர் பகுதியைச் சேர்ந்த கறுப்பையா ஐங்கரன் என்ற 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மது போதையில் இருந்ததன் காரணமாக அவர் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version