கனடாவில் கார் திருட்டு சந்தேகத்தில் ஒருர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடுகனடாவில் கார் திருட்டு சந்தேகத்தில் ஒருர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கனடாவின் மார்க்கம் மற்றும் டொரொண்டோ பகுதிகளில் கார் திருட்டு சந்தேகத்தில் ஒருவரை யார்க் பிராந்தியப் பொலிஸார் (York Regional Police) துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.

மார்க்கம் பகுதியில் உள்ள கென்னடி சாலை மற்றும் கிளேட்டன் டிரைவ் சந்திப்பில் ஒரு சந்தேகத்துக்குரிய வாகனத்தை பொலிஸார் பின் தொடர்ந்துள்ளனர்.

மாலை 7 மணியளவில், டொரொண்டோவின் கென்னடி சாலை மற்றும் போனிஸ் அவென்யூ அருகே (ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு பகுதியில்) அந்த வாகனத்தை நிறுத்த முயன்ற பொலிஸாருக்கும், காரில் இருந்த ஒரே ஆணுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கனடாவில் கார் திருட்டு சந்தேகத்தில் ஒருர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு | Police Shoot Driver Of Suspected Stolen

இதன் போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், டொரொண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு உயிராபத்து இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் எந்தவொரு பொலிஸாரும் காயமடையவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version