கனடாவில் விபத்தொன்றை ஏற்படுத்திய இந்தியர்கள் இருவர் நாடுகடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி, கனேடிய பொலிசார் ககன்பிரீத் சிங் (22) மற்றும் ஜக்தீப் சிங் (22) ஆகிய இருவரையும் கைது செய்தார்கள்.
கனடாவில் விபத்தை ஏற்படுத்திய இந்தியர்கள் நாடுகடத்தப்படும் அபாயம் | 2 Indian Students Sentenced For Canada Car Crash
43 வயதுடைய பூர்வக்குடியினரான ஒருவர் மீது காரை மோதியதுடன், அவர் காருக்கு அடியில் சிக்கியிருக்கிறார் என்பது தெரிந்தும் அவரை 1.3 கிலோமீற்றர் தூரம் வரை இழுத்துச் சென்றதே அவர்கள் கைது செய்யப்பட காரணமாக அமைந்தது.
பின்னர் ஓரிடத்தில் காரை நிறுத்தி, காருக்கடியில் சிக்கியிருந்த நபரின் உயிரற்ற உடலை வெளியே இழுத்துப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்கள் இருவரும்.
ககன்பிரீத் மற்றும் ஜக்தீப் ஆகிய இருவருக்கும் தற்போது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களுடைய தண்டனைக்காலம் முடிவடைந்ததும் இருவரையும் நாடுகடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.