குறுகிய பார்வை கொண்ட கல்விச் சீர்திருத்தத்தை நோக்கியே இந்த அரசாங்கம் நகர்கிறது

தொடர்பிலான விடயங்களை நானும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் முன்வைத்த போது எம்மைப் பார்த்து பரிகசித்தவர்கள்,

தற்போதுள்ள கல்வி முறையை நேர்மறையான சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தி, பிள்ளைகளுக்கு நன்மைகளை உருவாக்குவதற்குப் பதிலாக, மாணவர் தலைமுறையை அழிக்கும் குறுகிய பார்வை கொண்ட கல்விச் சீர்திருத்தத்தை நோக்கி நகர்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி இந்த பழமைவாத சீர்திருத்தத்தை எதிர்க்கிறது. என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி சுட்டிக்காட்டும் குறைபாடுகள் குறித்து சிலர் எதிர்க்கும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தற்போதுள்ள IMF இணக்கப்பாட்டின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும்போது, எதிர்க்கட்சியின் குரலை அடக்குவதற்கு, எதிர்க் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று, முன்னாள் ஜனாதிபதி கையெழுத்திட்ட, மக்களுக்கு விரோதமான IMF ஒப்பந்தமே காணப்படுகின்றது. தற்போதைய அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் அடிமையாக மாறியுள்ளது. அதன் தாளத்திற்கு ஆடும் பொம்மையாக மாறியுள்ளது. இதன் விளைவாகவே மின்சாரக் கட்டணங்களையும் எரிபொருள்களினது விலைகளையும் அதிகரித்துள்ளது. விலைச் சூத்திரங்களை மாற்றுவதாகச் சொன்ன அரசாங்கம், இன்று அந்த விலைச் சூத்திரங்களுக்கு அடிமைப்பட்டு காரியங்களை முன்னெடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று, நாடு பாதுகாப்பற்றதாக காணப்படுகின்றது. குற்ற அலை தினமும் அதிகரித்து வருகிறது. நாளாந்தம் உயிர்கள் இழக்கப்படுகின்றன. கொலைகாரர்கள், கொள்ளையர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்தியவர்கள் சமூகத்தின் கட்டுப்பாட்டைக் கையகப்படுத்தியுள்ளனர். இந்த அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கைச் சரியாக பேண முடியாதுபோயுள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து டியுசன் எடுப்போம் என சொன்ன அரசாங்கத்துக்கு இன்று குடிமக்களிடமிருந்து டியுசன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில், விவசாயிகளுக்கு கூட நிவாரணம் கிடைத்தபாடில்லை. அறுவடைக்கு நிலையான விலை கிடைக்காமை, உரம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு, தரமான விதைகள் கிடைக்காமை போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நெல்லுக்கு நிலையான விலைப் பெற்றுத் தருவோம் எனக் கூறிய இந்த அரசாங்கம், தற்போது நெல் தரகர்கள் அதை குறைந்த விலைக்கு வாங்கும்போது அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. எதிர்க்கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தி மக்களின் பிரச்சினைகளைப் வெளிப்படையாக பேசி அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எமக்கு அரசியல் சதிகளோ அல்லது டீலகளோ இல்லை. எமது ஒரே டீலும் ஒரே சமூக ஒப்பந்தமும் பொதுமக்களுடன் மட்டுமே காணப்படுகின்றன. இந்த நம்பிக்கையை உயிரைவிடவும் பாதுகாப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Exit mobile version