பிராட் பிட் நடித்த ஹாலிவுட் திரைப்படமான F-1 கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 3,626 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதால், இந்த ஆண்டு கவனம் ஈர்த்த திரைப்படமாக அமைந்துள்ளது.
டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கி பிரபலமான ஜோசப் கொசின்ஸ்கி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். F-1 படம் இந்தியாவில் மட்டும் இதுவரை சுமார் 76 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.