நோர்வூட் பிரதேச சபைக்கு சொந்தமான பொகவந்தலாவ கெர்க்கஷ்வோல்ட் எல்பட கீழ்பிரிவு மற்றும் மேல்பிரிவு ஆகிய தோட்டப்குதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நாளாந்தம் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் கேசல்கமுவ ஒயாவை ஊடருத்து செல்லும் இரண்டும் தொங்கு பாலங்களை எல்பட தோட்ட இளைஞர்களின் சொந்த முயற்சியில் புனரமைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (27) இடம் பெற்றது.
இதன்போது பாலம் அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றதோடு குறித்த இரண்டு தொங்கு பாலங்களும் திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கெர்க்கஷ்வோல்ட் தோட்ட உதவி முகாமையாளர்களான டி.எம். ஆர்.எஷ். மதுவந்த திஷாநாயக்க, பி.எம்.ஏ.ஆக்கேஷ் சரமசிங்க, தோட்ட இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த இரண்டு பாலங்களும் நோர்வூட் பிரதேச சபைக்கு சொந்தமானது. இந்த பாலம் சுமார் 100 வருடங்கள் பழைமை வாயந்தது. இந்த பாலத்தினை புனரமைத்து தருமாறு பல அரசியல்வாதிகளிடம் கோரிக்கைகள் முன்வைத்து வந்த போதிலும் இந்த பாலம் தொடர்பில் எவரும் அக்கறை செலுத்தவில்லை. எனவேதான் நாங்கள் எமது தோட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பபோடு எமது தோட்ட இளைஞர்கள் அனைவரும் ஒன்றினைந்து இரவு பகல் பாராமல் பாலத்தினை புனரமைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டதாக எல்பட தோட்ட இளைஞர்கள் தெரிவித்தனர் .
இன்றைய நாள் குறித்த பாலத்தினை சில அரசியல்வாதிகள் திறக்கப்போவதாக எமக்கு தகவல் கிடைத்த நிலையில், அதனை எமது இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்த போதிலும் பாலம் திறப்பு விழா நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு இளைஞர்களின் பாதுகாப்பு கருதி விசேட அதிரடிபடையினரும் நோர்வூட் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர் .
தற்போது இந்த தோட்ட இளைஞர்களால் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் பயன்பாட்டில் சுமார் 10 வருடங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பாடாது என பாலத்தை புனமைத்த இளைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.