காணாமல் ஆக்கப்பட்டோரது வழக்கு தீர்ப்புக்கு திகதி அறிவிப்பு..

நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுவுகக்கான தீர்ப்பு ஓகஸ்ட் மாதம் 28 அன்று திகதியிடப்பட்டுள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது தீர்ப்புக்காக இன்றையதினம் திகதியிடப்பட்டுள்ளது.

Exit mobile version