ரஜினியால் தள்ளிபோன எல்.ஐ.கே பட டீசர்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) எனும் படத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

எல்.ஐ.கே படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் டீசர் இன்றைய தினம் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், ‘எல்.ஐ.கே’ படக்குழுவான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, தனது எக்ஸ் கணக்கில், “தலைவர் தரிசனம் கூலி இசை வெளியீட்டுக்குப் பிறகு ‘எல்.ஐ.கே’ படத்தின் புதிய டீசர் திகதி அறிவிக்கப்படும்” என பதிவிட்டுள்ளது.

Exit mobile version