இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை துரிதப்படுத்தும் வகையில் ஆரம்ப வர்த்தக முயற்சிகளுக்கான தெற்காசியாவின் முன்னணி மாநாடும் புத்தாக்கத் திருவிழாவுமான Disrupt Asia 2025 எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இது நான்கு நாள் நிகழ்வு என்பதைத் தாண்டி புதுமையான கண்டுபிடிப்புக்களை ஊக்குவிப்பது, உலகளாவிய வாய்ப்புக்கள் உருவாக்குவது, நீண்டகாலக் கொள்கை மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான மாற்றங்களை ஏற்படுத்தப்படுவதிலும் கவனம் செலுத்தும் தேசிய மட்டத்திலான இயக்கமாக அமையும்.
அரசாங்க நிறுவனங்கள், தொழில்துறைப் பங்காளர்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இலங்கையில் தற்பொழுது ஆரம்ப வர்த்தக முயற்சிகளுக்கான சூழல் வளர்ச்சி கண்டு வருவதுடன், முன்னெப்போதும் இல்லாத வேகத்தை அடைந்துள்ளன.
Disrupt Asia 2025 மாநாடானது முதலீடுகளுக்குப் பொருத்தமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது, முதலீட்டாளர்கள் மற்றும் ஆரம்ப வர்த்தக முயற்சிகள் இலகுவாகவும் வெற்றிகரமாகவும் இலங்கை சந்தையை அடைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மற்றும் இலங்கையின் சந்தையை வேகப்படுத்துவது போன்றவற்றை நோக்காகக் கொண்டுள்ளது. இதுபோன்ற மூலோபாயத் தொடர்புகளை உலகளாவிய ரீதியில் கட்டியெழுப்புவதன் மூலம் Disrupt Asia 2025 மாநாடு இலங்கையை பிராந்தியத்தின் புதுமையாக்கத்திற்கான மையாகவும், இயக்க சக்தியாகவும் மாற்றும்.
Disrupt Asia 2025 மாநாடானது இதுவரையில் தொடர்ச்சியான உயர் முன்னிலை நிகழ்வுகள் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த விஜயங்களின் மூலம் உலகளாவிய ரீதியிலான ஈடுபாட்டைக் கணிசமானளவு அதிகரித்துள்ளது. உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுலாக் கண்காட்சி ஊக்குவிப்புப் பிரசாரங்கள் இலங்கையின் பன்முகப்பட்ட தொழில்நுட்பத்திற்கான சூழலை மேம்படுத்தும் அதேநேரம், முக்கிய சந்தைகளுக்கான சூழலையும் உருவாக்கியுள்ளது. அது மாத்திரமன்றி, இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள பிரதான உச்சிமாநாட்டுக்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளது.
புதுடில்லியில் நடைபெற்ற India’s Startup Mahakumbh 2025 இல் ஆயிரக்கணக்கான தொழில்முயற்சியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் தமது நோக்கத்தை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) அதிகாரிகள் காட்சிப்படுத்தியிருந்தனர். இந்தியானாவில் நடைபெற்ற உலகளாவிய தொழில்முயற்சிகள் மாநாட்டில் ஆரம்ப வர்த்தக முயற்சிகளுக்கான நாடுகளின் அமைச்சுக்கள் மற்றும் GEN முதலீட்டு மன்றத்தில் இலங்கை கலந்துகொண்டிருந்தது. சிங்கப்பூரில் நடைபெற்ற Echelon 2025 மாநாட்டில் nVentures உடன் கூட்டாண்மையை ஏற்படுத்தி டிஜிட்டல் ரீதியான வளர்ச்சியின் விளிம்பில் நாடு உள்ளது என்பதை வெளிப்படுத்தியிருந்தது.
இந்த உலகளாவிய சுற்றுலாக் கண்காட்சி நிகழ்ச்சித் தொடரின் முக்கிய அம்சமாக Asia Berlin அமைப்பைச் சேர்ந்த Carl Rainer Hartlein அவர்களின் கொழும்பு விஜயம் அமைந்தது. இந்த விஜயத்தின் போது அவர், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம், டிஜிட்டல் பொருளாதார முதலீட்டுக் குழு, Hatch Works, Port City Colombo, மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் இலங்கை சம்மேளனம் (SLASSCOM) போன்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடி தேசங்களுக்கு அப்பால் காணப்படும் புதுமையாக்கத்துக்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்தார். இந்த விஜயமானது Asia Berlin இன் தூதுவர் மனோரி உனம்புவே அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“இலங்கையானது மீள்திறன்கொண்ட மற்றும் புத்தாக்கத்தன்மை நிறைந்த நாடாகக் காணப்படுவதுடன், பல்வேறுபட்ட ஆரம்ப வர்த்தக முயற்சிகளுக்கான சிறந்த சூழலையும், உலகத் தரம்வாய்ந்த திறமையாளர்களையும் கொண்டுள்ளது. அதன் துடிப்பான புத்தாக்க மையம் மற்றும் சிறப்புக்கான வலுவான கலாசாரத்தின் ஊடாக கொடுக்கல் வாங்கல்களை வளர்ப்பது, ஒரங்கிணைப்புக்களை ஏற்படுத்துவது மற்றும் முன்னோடியான யோசனைகளை ஊக்குவிப்பதில் ஆசியாவில் அரசியல் ரீதியாக நடுநிலைமையான இணைப்பாளர் என்ற வகிபாகத்தை மேற்கொள்கின்றது.”
இந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி அதிமேதகு அநுர குமார திசாநாயக்க, டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் கௌரவ எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதாரதம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகரும், ICTA நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி.பி.நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். அது மாத்திரமன்றி உலகளாவிய தொழில்துறை நிபுணர்களான கலாநிதி.சஞ்ஜீவ வீரவருண, திரு.பானுக ஹரிச்சந்திர, பத்மஜா ருபரெல், திரு.ராஜன் ஆனந்தன், திரு.கிரேக் டிக்சன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். இந்தியாவின் டிஜிட்டல் கொடுப்பனவுத் தளத்தின் முன்னோடியான Paytm இன் நிறுவுனரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விஜய் ஷேகர் சர்மா Disrupt Asia 2025 மாநாட்டில் பிரதான உரையாற்றவுள்ளார்.
இலங்கையின் வணிகக் சூழல் எவ்வாறு ஆரம்ப வர்த்தக முயற்சிகளுக்கு ஏற்ற வகையில் வளப்படுத்தப்படுகின்றது என்பதையும், உலகளாவிய ரீதியில் உள்ள முதலீட்டாளர்கள் தமது முயற்சிகளை இலங்கையில் ஆரம்பிப்பது குறித்து ஏன் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் இந்த மாநாடு பகிரங்கப்படுத்தும்.
பரந்துபட்ட தெற்காசிய ஆரம்ப வர்த்தக சூழலில் உயர்ந்த வாய்ப்புக்களைத் தேடும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவுனர்கள், ஆரம்ப வர்த்தங்களுக்கான சூழலை ஏற்படுத்தியவர்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
முதலீட்டுக்கான இடமாக இலங்கை விளங்குகின்றது என்ற நிலையை உறுதிப்படுத்தி அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கச் செய்வதே இந்த வருட மாநாட்டின் நோக்கமாகும். பிரதான மாநாடு மற்றும் புத்தாக்கத் திருவிழா என்பன நாட்டின் முன்னணி தொழில்நுட்ப ஆரம்ப வர்த்தகங்களை முன்னிலைப்படுத்தி, உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களும் அவர்களின் புதுமையான படைப்புக்களை ஒரே மேடையில் காட்சிப்படுத்துபவையாக அமையவுள்ளன. அரசாங்க நிறுவனங்கள், தொழில்துறை அமைப்புக்கள், ஆரம்ப வர்த்தகங்களுக்கு ஏற்ற சூழலைக் கட்டியெழுப்புபவர்கள் மற்றும் உலகளாவிய வலையமைப்புக்கள் என மேலும் பல பங்காளர்களை இணைத்துக் கொண்டு இலங்கை தனது ஆரம்ப வர்த்தக முயற்சிகளுக்கான சூழலைப் புரட்சி செய்யும் பாதையில் முன்னேறி வருகிறது. இதன் மூலம் Disrupt Asia 2025 மாநாடு உலகளாவிய வாய்ப்புக்களைத் திறப்பதற்கான ஒரு அஙக்கமாகவும், உள்நாட்டு புதுமையாக்கங்களை வேகப்படுத்தும் ஓர் தளமாகவும் திகழும்.
ஆரம்ப வர்த்தகங்களைக் காட்சிப்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது கோரப்பட்டுள்ளன. இது உருவாகி வரும் நிறுவனங்களுக்கு, தங்களின் புதுமையாக்கங்களை உலகளாவிய முதலீட்டாளர்கள், தொழில்துறை முன்னோடிகள் மற்றும் சாத்தியமான கூட்டாளர்கள் ஆகியோருக்கு முன்னிலைப்படுத்தும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கப்படும். ஆரம்ப வர்த்தக முயற்சிகளைக் காட்சிப்படுத்தலுக்கான விண்ணப்பம் மற்றும் பிரதான மாநாட்டுக்கான டிக்கட் என்பவற்றை www.disruptasia.today என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இது தொழில்துறையினருடனான கலந்துரையாடல்கள், கற்றல்கள் மற்றும் கூட்டாண்மைகளை ஏற்படுத்தி இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை வளப்படுத்தும். மேலதிக விபரங்களுக்கு info@disruptasia.today என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகத் தொடர்புகொள்ளவும்.
