தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம் ஆரம்பம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை தற்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர், அதாவது 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பதன் மூலம் நிறைவேற்ற முடியும்.

பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்த பின்னர், பொலிஸ்மா அதிபர் பதவிக்கான பெயரை ஜனாதிபதி அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைப்பார்.

Exit mobile version