இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்றைய தினம் (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி கொடியேற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் காலை 9 மணியளவில், துணைத் தூதர் சாய் முரளி இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
பின்னர், சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை அவர் வாசித்தார்.
இந்நிகழ்வில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
