புதிய அரசியல் கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வு ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான பதிவுக்காக விண்ணப்பித்திருந்த புதிய அரசியல் கட்சிகளின் நேர்முகத் தேர்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அவற்றில் 47 அரசியல் கட்சிகள் முதற்கட்ட நேர்முகத் தேர்வுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டுக்கான அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த பெப்ரவரி மாதம் கோரப்பட்டிருந்த நிலையில், 83 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவற்றில் அடிப்படை ஆவணங்களைக் கூட பூர்த்தி செய்யாத 36 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 

அதன்படி, தற்போது 47 விண்ணப்பங்களுக்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 

மேலும் அந்த நேர்முகத்தேர்வில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகள் இரண்டாவது சுற்று நேர்முகத் தேர்வுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளன. 

குறித்த நேர்முகத்தேர்வுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகள் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையாளர் தொிவித்துள்ளார். 

தற்போது, 86 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version