தைவான் கடல் எல்லையில் சீனாவின் ராணுவ விமானங்களும், கடற்படை கப்பல்களும் இயங்குவதை தைவான் கண்டறிந்துள்ளது.
தங்கள் நாட்டு எல்லையில் சீன விமானங்கள், கப்பல்கள் நடமாட்டம் இருப்பதை தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது. இதுகுறித்து, தமது சமூக வலை தள பக்கத்தில் ஒரு பதிவையும் வெளியிட்டு உள்ளது.
கடல் எல்லையில் சுற்றித்திரியும் சீனாவின் போர் விமானங்கள் ; உஷாரான தைவான் | Chinese Warplanes Patrol Maritime Border
தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சு
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: தைவானை சுற்றி 10 ராணுவ விமானங்கள், 6 போர்க்கப்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன. விமானங்களில் 2 விமானங்கள் இடைநிலைக் கோட்டை கடந்து நுழைந்துள்ளன.
நாங்கள் நிலைமையை கண்காணித்து சூழலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தைவான் மீது சீனா தமது ஆதிக்கத்தை செலுத்த தீவிரமாக செயலாற்றி வருவதால், தங்கள் நாட்டுக்கு ஆதரவாக நிற்க இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தினார் என்று தைவான் நாட்டு செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளன.