இன்ஸ்டகிராம் பயன்படுத்த கனடா இங்கிலாந்தில் சிறுவர்களுக்கு கட்டுப்பாடு!

  கனடா , இங்கிலாந்த்தில் , இன்ஸ்டகிராம் பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னனி சமூக வலைத்தள நிறுவனமாக ‘மெட்டா’ நிறுவனத்தின் சமூக வலைத்தள செயலிகளான பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி பெற்றோர்கள் தங்களின் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகளை நேரடியாக மேற்பார்வையிட கூடுதல் வசதிகளை அளித்துள்ளது.

இதன்மூலம் பெற்றோர் அனுமதி இல்லாமல் சிறுவர்கள் இன்ஸ்டாகிராமில் நேரலையில் தோன்றுதல், நிர்வாண படங்கள் பரிமாறுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

பெற்றோர்கள் தங்களுடைய கணக்குகளுடன் குழந்தைகளின் கணக்குகனை இணைந்து இதனை செயல்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.

Exit mobile version