டொரொண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தனது சிறிய மகனை நாட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்ல முயற்சித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனது மனைவி ஆறு வயது மகனை கனடாவை விட்டு வெளியே அழைத்துச் செல்லலாம் என சந்தேகம் தெரிவித்து புகார் செய்ததைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.
பீல் பிராந்திய காவல்துறை மற்றும் கனடா எல்லைப் பாதுகாப்பு சேவையின் உதவியுடன், அந்த பெண்ணும், குழந்தையும் பியர்சன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
36 வயதுடைய குறித்த பெண் குழந்தையை கடத்தினார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தை தந்தையிடம் பாதுகாப்பாக மீளவளிக்கப்பட்டதாகவும், சந்தேகநபர் ஒன்டாரியோவில் உள்ள பெர்த் நகர நீதிமன்றத்தில் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது.