ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதியிலிருந்து 6 ஆம் திகதி வரை ஜனாதிபதி அநுர வியட்நாமில் தங்கியிருப்பார் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.