உள்ளூராட்சி சபைதேர்தலில் பட்டினமும் சூழலும் பிரதேச சபை மற்றும் திருகோணமலை நகரசபைக்கும் போட்டியிடும் இரு சுயேட்சைக்குழுக்களை தமது கட்சியுடன் இணைப்பது தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று குறித்த இரு சுயேட்சைக்குழுக்களையும் சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமது கட்சியானது வட கிழக்கில் இணைந்த கட்சியாக விஸ்தரிக்கப்பட்டு அதனை பதிவு செய்தல் தொடர்பாக வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என அர்ச்சுனா எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை தேர்தலில் தமிழ்த் தேசியம் தொடர்பில் கருத்து வெளியிடும் கட்சிகளை தாம் ஆதரிப்பதாகவும் குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சிக்கு முன்னுரிமை வழங்கி ஆதரிக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏனைய தமிழ் கட்சிகளை ஆதரிப்பது தொடர்பில் ஒரு பொது முடிவுக்கு வர உத்தேசித்திருப்பதாகவும், எக்காரணம் கொண்டும் தேசிய மக்கள் சக்தியுடன் போட்டியிடப் போதில்லை எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தன்கு இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நியாயம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே, பிள்ளையானை கைது செய்துள்ளனர். பிள்ளையானின் சாரதியை கைது செய்துள்ளனர்.
அம்பைத்தான் எடுத்துள்ளனர் எனவும் அம்பு எய்தவர்களை பிடிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.