No products in the cart.
சூரி நடிக்கும் மண்டாடி படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது மிரட்டலான ஹீரோவாக கலக்கிக்கொண்டு இருக்கிறார் சூரி.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படம் சூரி மீது இருந்த நகைச்சுவை கண்ணோட்டத்தை மாற்றி ஹீரோவாக பார்க்க வைத்தது. இதை தொடர்ந்து கருடன், கொட்டுகாளி, விடுதலை 2 மற்றும் மாமன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை சூரி கொடுத்து வருகிறார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம்தான் மண்டாடி. இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தை வெற்றிமாறன் மற்றும் எல்ரெட் குமார் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தில் சூரியுடன் இணைந்து தெலுங்கு நடிகை சுஹாஸ் நடித்து வருகிறார். மண்டாடி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ரூ. 50+ கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வருவதாக பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.