உலகம்

மியன்மார் நிலநடுக்கம் – 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என எச்சரிக்கை

மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக நூறிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவானது.

குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

தாய்லாந்திலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்ட நிலையில் பேங்கொக்கில் உயரமான கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்ததில் 81 கட்டுமானத் தொழிலாளர்கள் காணாமற் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மீட்பு முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…