உலகம்

அமெரிக்காவிற்கு போட்டியாக சீனா அறிமுகப்படுத்திய புதிய விசா!

 அமெரிக்காவில் H-1B விசாவுக்கான ஆண்டுக் கட்டணம் பல மடங்கு அதிகரித்த நிலையில், K விசா என்ற புதிய விசாவை சீனா அறிமுகப்படுத்தி உள்ளது.

அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற $1,00,000 (88 இலட்சம் ரூபாய்) கட்டணம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசாங்கம் உத்தரவிட்டது.

அடுத்த 12 மாதங்களுக்கு இந்த உத்தரவு செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீடிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று டிரம் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் H-1B விசாவுக்கான ஆண்டுக் கட்டணம் பல மடங்கு அதிகரித்த நிலையில், K விசா என்ற புதிய விசாவை சீனா அறிமுகப்படுத்தி உள்ளது.

H-1B விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படுகின்ற, உலகம் முழுவதும் உள்ள அதிதிறமையான பணியாளர்களை தன்பக்கம் ஈர்க்கும் நோக்கில் இந்த புதிய விசாவை  சீனா அறிமுகம் செய்துள்ளது.

அக்டோபர் 1 முதல் K விசா நடைமுறைக்கு வருகிறதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.  

What's your reaction?

Related Posts

ODI அணிக்கு மீண்டும் திரும்பிய தசுன்!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிக்காக குசல் மெண்டிஸ் அணி தலைவராக செயற்படவுள்ளதோடு, தசுன் சானக இலங்கையின் ஒருநாள் அணிக்கு மீண்டும்…