No products in the cart.
3 நாட்களில் கிஸ் படம் செய்துள்ள வசூல்!
நடன இயக்குநரும் பிரபல நடிகருமான சதீஷ், கிஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். லிஃப்ட், டாடா மற்றும் ஸ்டார் என தொடர்ந்து மக்களை என்டர்டெயின் செய்து வரும் நடிகர் கவின் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
மேலும் அயோத்தி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடிக்க, மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கடந்த 19 ஆம் திகதி திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் கிஸ் படம், இதுவரை உலகளவில் 2.2 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.
இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.