No products in the cart.
இலங்கையில் ஹல்துமுல்ல பகுதியில் நிலநடுக்கம்
இலங்கையின் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவின் பல இடங்களில் நேற்ற மாலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6.46 மற்றும் 6.47 மணிக்கு ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவின் வெலன்விட்ட, அக்கரசிய, லெமஸ்தோட்ட, முருதஹின்ன மற்றும் பிற பகுதிகளில் ஒரு சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தின் போது எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
இது மிகவும் சிறிய அளவிலான நிலநடுக்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் இது பல்லேகலை, ஹக்மன, மஹா கனதராவ மற்றும் அம்பாறை நில அதிர்வு நிலையங்களால் பதிவு செய்யப்படவில்லை என்று பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் துணை இயக்குநர் ஈ.எம்.எல். உதய குமார தெரிவித்தார்.
இருப்பினும், இந்த திடீர் நிலநடுக்கம் குறித்து பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.