உலகம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தீபாவளி அரச விடுமுறையாக அறிவிப்பு

அமெரிக்காவில் தீபாவளியை அதிகாரப்பூர்வமாக அரச விடுமுறையாக அறிவித்த மூன்றாவது மாநிலமாக கலிபோர்னியா மாறியுள்ளது.

கலிபோர்னியா ஆளுநர் கெவின் நியூசம் நேற்று செவ்வாய்க்கிழமை தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் சட்டமூலத்தில் கையழுத்திட்டுள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தீபாவளியை அதிகாரப்பூர்வமாக அரச விடுமுறையாக அங்கீகரித்த முதல் மாநிலமாக பென்சில்வேனியா மாறியது.

இதனையடுத்து, இந்த ஆண்டு நியூயார்க் நகரில், தீபாவளி நாள் அன்று அரச பாடசாலைகளுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீபாவளியை அதிகாரப்பூர்வ அரச விடுமுறையாகக் அறிவிப்பதற்கான“AB 268” என்ற சட்டமூலம் கடந்த செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவில் உள்ள சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

கலிபோர்னியா சட்டமன்ற உறுப்பினர் ஆஷ் கல்ரா இந்த சட்டமூலத்தை சபையில் முன்வைத்திருந்தார்.

“கலிபோர்னியாவில் இந்திய அமெரிக்கர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்,

இந்நிலையில், தீபாவளியை அதிகாரப்பூர்வ அரச விடுமுறையாக அறிவிப்பது, நமது பன்முகத்தன்மை கொண்ட மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான கலிபோர்னியர்களுக்கு தீபாவளியை அறிமுகப்படுத்த உதவும்” என்று கல்ரா கடந்த மாதம் கூறியிருந்தார்.

“தீபாவளி நல்லெண்ணம், அமைதி மற்றும் புதுப்பித்தல் உணர்வு ஆகியவற்றின் செய்தியுடன் சமூகங்களை ஒன்றிணைக்கிறது.

கலிபோர்னியா தீபாவளியையும் அதன் பன்முகத்தன்மையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதை இருளில் மறைத்து வைக்கக்கூடாது,” என்று ஆஷ் கல்ரா மேலும் தெரிவித்திருந்தார்.

தீபாவளியை அரச விடுமுறையாக அறிவிப்பதற்கான கலிபோர்னியாவின் அறிவிப்பை சமூகத் தலைவர்களும் முன்னணி புலம்பெயர் அமைப்புகளும் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…