இலங்கை

மோடியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் வரலாறு காணாத பாதுகாப்பு – விசேட குழுவும் இந்தியாவிலிருந்து வருகை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு வருகைத்தர உள்ளார். இந்த நிலையில் அவரது வருகைக்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்பு குழுவொன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி  எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மோடியின் வருகையின் போது கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை கட்டுநாயக்காவில் சர்வதேச விமான நிலையத்தில் மோடி தரையிறங்கியது முதல் 6ஆம் திகதி அவர் செல்லும் வரை கொழும்பு உட்பட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் மற்றும் மூத்த இந்திய அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்வார்கள்.

இந்தியப் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் பிற மூத்த இந்திய அதிகாரிகள் வருகைதர உள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியா ஆகியோருடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்த உள்ளார்.

மேலும், பிரதமர் மோடி, அனுராதபுரத்தில் புனித ஸ்ரீ மகா போதியில் வழிபாடு நடத்தவும், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் உள்ளார்.

மேல் மாகாண மூத்த டிஐஜி சஞ்சீவ தர்மரத்னே, மோடியின் கொழும்பு பயணத்துக்கான பாதுகாப்புகளை கண்காணிக்க உள்ளார்.  ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு மற்றும் இந்திய பாதுகாப்புக் குழுவும் ஒருங்கிணைந்து இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியும் அவரது குழுவினரும் விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு பயணிக்கும்போதும், கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் பயணிக்கும் போதும் பல வீதிகள்  அவ்வப்போது மூடப்படும்.

கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்காக அதிகளவான பொலிஸார் மற்றும் சிறப்புப் படையினர் பயன்படுத்தப்பட உள்ளனர்.

இதேவேளை, மோடியின் பாதுகாக்கான ஒத்திகை இன்று (2) நடத்தப்படுவதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…