உலகம்

கிறிஸ்துமஸ் தினத்தில் இங்கிலாந்தில் சோகம்

தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு கடற்கரையில் கிறிஸ்துமஸ் தின நீச்சலுக்காகச் சென்ற ஒரு குழுவினர் கடுமையான கடல் அலைகளினால் பாதிக்கப்பட்டனர்.

இதன் விளைவாக இரண்டு பேர் கடல் அலையில் அல்லுண்டு காணாமல் போயுள்ளதாக டெவன் மற்றும் கார்ன்வால் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடலில் அல்லுண்டு சென்ற பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும், கடலில் அல்லுண்டு காணாமல் போன 40 மற்றும் 60 வயதுடைய இரண்டு ஆண்கள் இன்னமும் மீட்கப்படவில்லை என்பதையும் பொலிஸார் உறுதிபடுத்தினர்.

உயிர் காக்கும் பிரிவினருடன் இணைந்து பொலிஸார் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான விரிவான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

பிலிப்பைன்ஸில் பாரிய குப்பை மேடு சரிவு – ஒருவர் மரணம், 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் பினாலிவ் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிலு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 38 பேர் காணாமல்போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக அந்நாட்டு அரசு…