No products in the cart.
ரூபா300ஐ கடந்த டொலரின் பெறுமதி!
இன்று 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 303.02 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 294.13 ஆகவும் பதிவாகியுள்ளது.
2024 செப்டம்பர் 27ஆம் திகதிக்கு பின்னர், டொலர் ஒன்றின் பெறுமதி 300 ரூபாவைக் கடக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடப்பட்டுள்ளது.