உலகம்

நெடுஞ்சாலையில் விழுந்து நொருங்கிய விமானம்!

தெற்கு புளோரிடாவில் நடந்த விமான விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று 11ஆம் திகதி அமெரிக்க நேரப்படி காலை 11 மணிக்கு. இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வெளிநாட்டு அறிக்கைகளின்படி, விபத்துக்குள்ளானது இலகுரக விமானம் என தெரிவிக்கப்படுகிறது.

போகா ரேட்டனில் இருந்து டல்லாஹஸ்ஸி சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் போகா ரேட்டனில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விமான விபத்து நடந்த நேரத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த ஒரு வாகன ஓட்டி தப்பிக்க முயன்றபோது அருகிலுள்ள மரத்தில் மோதி காயமடைந்தார். இருப்பினும், அவரது நிலைமை மோசமாக இல்லை என்று கூறப்படுகிறது.

விமான விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.  

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…