உலகம்

டியாகோ கார்சியா அமெரிக்க கடற்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்?

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான கடற்படைத் தளமாகக் கருதப்படும், சாகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) தளம் மீது ஈரான் இரண்டு நடுத்தர தூர பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இருப்பினும், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இராணுவத் தளம் மீது தொடுக்கப்பட்ட இத்தாக்குதலால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இந்த ஏவுகணைகளில் ஒன்று வான்பரப்பிலேயே அழிந்துள்ளதாகவும், மற்றைய ஏவுகணையை அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று தாக்கி முறியடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இத்தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வெள்ளை மாளிகை, அமெரிக்காவிலுள்ள பிரித்தானிய தூதரகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பன பதிலளிக்க மறுத்துவிட்டன. 

ஈரான் நிலப்பரப்பின் வெவ்வேறு இடங்களிலிருந்து டியாகோ கார்சியா தளம் தோராயமாக 3,800 கிலோமீட்டர் முதல் 5,200 கிலோமீட்டர் வரையிலான தொலைவில் அமைந்துள்ளது. 

சமீபத்தில் இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் அமெரிக்காவினால் ‘ஐரிஸ் டேனா’ (Iris Dana) போர்க்கப்பல் மீது டார்பிடோ தாக்குதல் நடத்திய நீர்மூழ்கிக் கப்பல், இந்த டியாகோ கார்சியா தீவிலிருந்தே வந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இத்தீவானது இலங்கையிலிருந்து சுமார் 1,600 கிலோமீட்டர் (1,000 மைல்) தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…