இலங்கை

கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையே மேலதிக ரயில் சேவைகள்

ஸ்ரீ தலதா வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் மேலதிக இரு ரயில் சேவைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இயக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 7:55 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவில் கண்டியை சென்றடையும்,

இதேவேளை, இரவு 8:30 இற்கு கண்டியிலிருந்து புறப்பட்டும் ரயில் நள்ளிரவில் கொழும்பு கோட்டையை வந்தடையும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விசேட ரயில்கள் ரம்புக்கனை ரயில் நிலையத்தில் தரித்து செல்லுமென தெரிவிக்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…