கனடா

கனடாவில் 1.44 லட்சம் ஃபோர்டு F-150 ரக வாகனங்களை திரும்பப் பெறுகிறது

கனடாவில் இயங்கும் ஃபோர்டு மோட்டார் நிறுவனம், சுமார் 1,44,000 ஃபோர்டு F-150 ரக வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இந்தத் திரும்பப் பெறல், 2015-17 ஆம் ஆண்டு மாடல் வாகனங்களைப் பாதிக்கும். குறிப்பாக, ஆறு வேக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட வாகனங்கள் இதில் அடங்கும்.

பாதிக்கப்பட்ட வாகனங்களில், உள் டிரான்ஸ்மிஷன் லீட் ஃபிரேமில் உள்ள மின் இணைப்புகளில் ஏற்படும் சிதைவு, டிரான்ஸ்மிஷன் ரேஞ்ச் சென்சாரில் இருந்து இடைவிடாத சிக்னலை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது வாகனம் இயக்கத்தில் இருக்கும்போது எதிர்பாராத விதமாக குறைந்த கியருக்கு மாறுவதற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த சிக்கலைத் தீர்க்க பல தீர்வுகளை ஃபோர்டு கோடிட்டுக்காட்டியுள்ளது குறிப்பிடபப்டுகின்றது.

இதில், டீலர்கள் மாடலின் பவர்டிரெய்ன் கண்ட்ரோல் மாட்யூல் (பிசிஎம்) மென்பொருளைப் புதுப்பித்தல் அடங்கும். ஃபோர்டு கூறுகையில், இந்த அப்டேட்டில் “வன்பொருள் தோல்விகளைக் கண்டறியவும், டிரான்ஸ்மிஷன் தேவையற்ற டவுன்ஷிஃப்ட்டைக் கட்டளையிடுவதைத் தடுக்கவும் மேம்படுத்தப்பட்ட லாஜிக்” சேர்க்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, மென்பொருள் நிறுவலின் முன், இந்த சென்சார் தொடர்பான “குறிப்பிட்ட கண்டறியும் சிக்கல் குறியீடுகளை” காட்டியுள்ள எந்தவொரு வாகனத்திலும் டிரான்ஸ்மிஷன் லீட் ஃபிரேமை ஃபோர்டு மாற்றும் என தெரிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எந்தச் செலவும் இன்றி வரும் என்று ஃபோர்டு நிறுவனம் கூறுகிறது.

டிரைவர்கள் தங்கள் வாகனங்கள் இந்தத் திரும்பப் பெறலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க, நிறுவனத்தின் இணையதளத்தில் தங்கள் VIN ஐ உள்ளிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…