சினிமா

ரீ ரிலீஸான சச்சின் படம் செய்துள்ள வசூல்!

தளபதி விஜய்யின் கரியரில் மிகப்பெரிய வசூல் செய்த படங்கள் பல உள்ளன. பெரிய வசூலை செய்யவில்லை என்றாலும், ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள படம் தான் சச்சின்.

இப்படத்தை இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார். இவர் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஆவார். மேலும் சச்சின் இவருடைய முதல் திரைப்படமாகும்.

மேலும் இப்படத்தில்  விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். வடிவேலு, சந்தானம், ரகுவரன் என இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

2005ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை தற்போது 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ ரிலீஸ் செய்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு.

கடந்த வாரம் திரையில் வெளிவந்த இப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் ரூ. 7.2 கோடி வசூல் செய்துள்ளது.

What's your reaction?

Related Posts

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பாடசாலை தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை…