கனடா

கனடா சூதாட்ட விடுதிகளில் 2 இலட்சம் டொலர் மோசடி: நால்வர் கைது

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள சூதாட்ட விடுதிகளில் 200,000 டொலர்களுக்கும் அதிக தொகையை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணத்தில் திட்டமிட்ட குற்றங்களை ஒடுக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் கூட்டுப் படைகளின் சிறப்பு அமலாக்கப் பிரிவு, வான்கூவர் சூதாட்ட விடுதி ஒன்றில் இந்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையை அடுத்து, இக்கைது நடவடிக்கையை அறிவித்தது.

சந்தேகநபர்களான இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் சூதாட்ட விடுதியில் மோசடியில் ஈடுபடுவதாக, மாகாணத்தின் அனைத்து சூதாட்டங்களையும் ஒழுங்குபடுத்தும் ‘சுயாதீன சூதாட்டக் கட்டுப்பாட்டு அலுவலகம்’ கடந்த மே 4 ஆம் திகதி பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…