உலகம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (8) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 

பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.45 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்து 96 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. 

அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.41 சதவீதம் அதிகரித்து 93.63 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. 

லெபனான் மீதான தாக்குதலை கண்டித்து ஈரான் இஸ்ரேல் மீது நேற்று தாக்குதலை நடத்தியது. 

அதற்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேலும் தாக்குதலை நடத்திய நிலையில் ஏற்பட்டுள்ள அச்சநிலைமையை அடுத்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்து வருகின்றது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…