No products in the cart.
அமெரிக்க ஓஹியோவில் துப்பாக்கிச் சூடு ; விசாரணை தீவிரம்
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து, சம்பவ இடத்தில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், தடயவியல் நிபுணர்கள் மற்றும் விசாரணைக் குழுக்கள் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து தகவல்களை திரட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்ததாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இது தொடர்பான முழுமையான விபரங்களை உறுதிப்படுத்தும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளது.
இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், தாக்குதலின் பின்னணி மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.















