உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் – பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

மத்திய கிழக்கு பிராந்திய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் ஒன்றிற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். 

தனது ‘X’ சமூக ஊடக கணக்கில் பதிவொன்றையிட்டு பிரதமர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக தாம் இருதரப்புடனும் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மோதல்கள் நிலவிய காலம் முழுவதும் இரு நாடுகளுக்கும் இடையில் பிரதான மத்தியஸ்தராக செயற்பட்ட பாகிஸ்தான் பிரதமர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது, “இதற்கு முன்னர் எப்போதும் அமைதி இந்த அளவிற்கு நெருக்கமாக இருந்ததில்லை” என்பதாகும்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…