No products in the cart.
கனடாவில் தீவிரமடையும் வைரஸ் பரவல்; அமெரிக்கா அவசர எச்சரிக்கை
கனடாவின் மனிடோபா மாகாணத்தில் ஹெபடைடிஸ் ஏ நோய் வேகமாகப் பரவி வருவதையடுத்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தனது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
2025 ஏப்ரல் மாதம் முதல் தொடங்கியுள்ள இந்த நோய் பரவலில் இதுவரை 658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 142 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசுத்தமான உணவு, நீர் மற்றும் நெருங்கிய தொடர்புகள் மூலம் பரவும் ஹெபடைடிஸ் ஏ, கல்லீரலைப் பாதிக்கும் தொற்று நோயாகும்.
பலவீனம், குமட்டல், வாந்தி, வயிற்று வலி, மஞ்சள் காமாலை உள்ளிட்ட அறிகுறிகள் இதனால் ஏற்படக்கூடும். அதேவேளை பயணிகள் கைகளை அடிக்கடி கழுவுதல், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியம் என, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) வலியுறுத்தியுள்ளது















