உலகம்

இலங்கை – மேற்கிந்தியா 1ம் டெஸ்ட் – இரண்டாம் நாள் ஆட்டம் இன்று

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (26) இடம்பெறவுள்ளது. 

மேற்கிந்திய தீவுகளின் நோர்த் சவுண்ட் மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

இதன்படி தமது முதலாம் இனிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்டநேர நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா அதிகபட்சமாக 120 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். 

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பந்துவீச்சில் ஜஸ்ட்டின் கிரேவ்ஸ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய நாளி தமது முதலாம் இனிங்ஸை ஆரம்பித்த போதிலும் எவ்வித ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் இன்றைய தினம் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…