No products in the cart.
பூங்காவுக்கு வரும் புதிய விலங்குகள்!
தேசிய விலங்கியல் திணைக்களம், விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், தெஹிவளை விலங்கியல் பூங்காவிற்கு பல புதிய விலங்குகளை கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விலங்கியல் திணைக்களத்தின் இயக்குநர் சந்தன ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
திட்டத்தின் ஒரு பகுதியாக, விலங்கியல் பூங்காவுக்கு விரைவில் மூன்று வரிக்குதிரைகள், இரண்டு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகள், மூன்று அனகொண்டாக்கள், வாத்துகள் மற்றும் இரண்டு பெரிய ஆமைகள் என்பன கொண்டு வரப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஈடாக, திணைக்களம் இரண்டு ஜோடி டோக் மக்காக்குகள், ஒரு ஜோடி இராட்சத அணில்கள், ஒரு ஜோடி நீர்யானைகள், ஒரு ஜோடி பூனைகள் உட்பட்ட விலங்குகளை குறித்த நாடுகளுக்கு அனுப்பியுள்ளது.
அழிந்து வரும் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களுக்கான பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க முயற்சிகளின் அடிப்படையிலேயே இந்த விலங்கினங்கள், விலங்கின பூங்காவுக்கு கொண்டு வரப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.