உலகம்

இந்திய சினிமா பாடல்களுக்கு தடை!

பாகிஸ்தான் எஃப்எம் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்துள்ளதாக பாகிஸ்தான் பிபிஏ பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்தார்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் – இந்தியா இடையே மோதல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் எஃப்எம் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்துள்ளதாக பிபிஏ பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்தார்.

பாகிஸ்தானின் தகவல்தொடர்புத் அமைச்சர் அட்டா தரார் இந்த நடவடிக்கையைப் பாராட்டியதுடன், பிபிஏ வின் முடிவை தேசபக்திக்கான எடுத்துக்காட்டு என விவரித்தார்.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…