No products in the cart.
டொரண்டோவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி
கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள நார்த் யார்க் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 1:24 மணியளவில், சேதமடைந்த வாகனம் ஒன்று அபாயகரமான முறையில் இயக்கப்படுவதாகக் கிடைத்தத் தகவலைத் தொடர்ந்து, பொலிஸார் அல்சன் வீதிக்கு கிழக்கே உள்ள வில்சன் மற்றும் கிங் ஹை ஏவென்யூ பகுதிக்குச் சென்றுள்ளனர்.
விபத்துக்குள்ளான குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள், சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், கைத்துப்பாக்கியை வைத்திருந்த நபரை எதிர்கொண்டனர்.














