கனடா

கனடாவில் இந்திய வம்சாவளி வீட்டு உரிமையாளர் கைது: பின்னணி

Indian landlady in Canada held after harassing tenant: கனடாவில் தன் வீட்டில் குடியிருப்பவருக்கு தொல்லை கொடுத்ததாக இந்திய வம்சாவளிப்பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில், தன் வீட்டு உரிமையாளர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக புகாரளித்துள்ள கனேடியர் ஒருவர், அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

வீட்டில் குடியிருப்பவருடன் பிரச்சினை

ராஜ் திவானா என்னும் இந்திய வம்சாவளியினரான பெண், தனது வீட்டை கனேடியர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். 

கனடாவில் இந்திய வம்சாவளி வீட்டு உரிமையாளர் கைது: பின்னணி | Indian Lady Arrested In Canada Harrass Tenant

ஆனால், அந்தக் கனேடியர் தான் வாடகைக்கு வசிக்கும் வீட்டில் தான் பார்பிக்யூ பயன்படுத்தியதைத் தொடர்ந்து பிரச்சினை உருவானதாக தெரிவித்துள்ளார்.

பார்பிக்யூ பயன்படுத்துவதால் வீட்டுச் சுவர்களில் கரி பிடிப்பதாக அந்தப் பெண் கூற, அது கரி அல்ல துரு என்று கூறியுள்ளார் அந்தக் கனேடியர்.

அவர் பார்பிக்யூ முறையில் உணவு தயாரிக்கும்போது திவானா தடுக்க முயல, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இப்படியே திவானா தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவதாக குற்றம் சாட்டும் அந்தக் கனேடியர் அதற்கு ஆதாரமாக வீடியோக்களை வெளியிட, ஒரு கட்டத்தில் பொலிசார் திவானாவைக் கைது செய்துள்ளார்கள். 

What's your reaction?

Related Posts

கனடாவில் ஓடும் போலீஸ் வாகனத்திலிருந்து தப்பித்த நபர் காயம்

கனடாவின் எல்ஜின் கவுண்டி பகுதியில், காவல்துறையின் காவலில் இருந்த நபர் ஒருவர் ஓடும் வாகனத்திலிருந்து தப்பித்து, பின்னர் காயமடைந்த சம்பவம் குறித்து மாகாணத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (SIU) விசாரணையைத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை மதியம்…