இலங்கை

ஜனாதிபதி மற்றும் வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் இடையே சந்திப்பு

வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை (Tô Lâm) சந்தித்து கலந்துரையாடினார்.

வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான 55 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்து கொண்டார்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…