No products in the cart.
அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிரான மனு தள்ளுபடி
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனுவை இலங்கை பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.