இலங்கை

வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 சிறைக் கைதிகள் இன்று (12) விடுதலை செய்யப்படுகின்றனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படுகின்றனர்.

அதன்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்த இருந்து 20 கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளை யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் டி.ஐ.ஜெயவர்த்தன உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கைலாகு கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…