No products in the cart.
மற்றுமொரு பேருந்து விபத்து 20 பேர் காயம்
யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நேற்றிரவு 12ஆம் திகதி அலதெனிய, யடிஹலகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பரிகம, கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.