இலங்கை

யாழில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது நேற்றைய தினம் 12 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வேலணை பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி வந்த பேருந்து, மோட்டார் சைக்கிளில் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட போது, இடம் தரவில்லை என மோட்டார் சைக்கிளில் வந்த மூவரும் பேருந்து சாரதியுடன் முரண்பட்ட நிலையில், பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு, தப்பி சென்றுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் பேருந்தில் இருந்த இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…