No products in the cart.
மூவருக்கு மரண தண்டனை!
ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று 16ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த மூவரும் 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலில் 17 கிலோகிராமுக்கு அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் 5 பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டார்.