இலங்கை

ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தம்

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று (21) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் 23 ஆம் திகதி வரை சேவைகள் வழங்கப்படாது என்று அந்தத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக சேவை வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி கணினி தரவுத்தள அமைப்பில் அவசர பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஊழியர் சேமலாப நிதியத்தின் முழு நன்மைகள், இறந்த உறுப்பினர்களின் நன்மைகள், 30% நன்மைகளை செலுத்தல், புதிய நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் பி கார்டுகளை திருத்துதல் ஆகியவை நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் அலுவலகங்களில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.

குறித்த சேவைகளைப் பெற 011 2201201 என்ற எண்ணை அழைத்து திகதியை முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…